தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கர்நாடக அரசு பேருந்து உள்பட 4 வாகனங்களில் ரூ.16 லட்சம் பணம் பறிமுதல் - கர்நாடக அரசு பேருந்து உட்பட 4 வாகனங்களில் ரூ.16 லட்சம் பணம் பறிமுதல்

கர்நாடக அரசு பேருந்து உள்பட 4 வாகனங்களில் ரூ.16 லட்சம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

16 lakhs rupees seized by Election flying Squad in Erode, கர்நாடக அரசு பேருந்து உட்பட 4 வாகனங்களில் ரூ.16 லட்சம் பணம் பறிமுதல்,Election flying Squad
கர்நாடக அரசு பேருந்து உட்பட 4 வாகனங்களில் ரூ.16 லட்சம் பணம் பறிமுதல்

By

Published : Apr 1, 2021, 4:10 PM IST

ஈரோடு: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது தேர்தல் நெருங்கிவரும் நிலையில் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று (ஏப்ர. 1) சத்தியமங்கலம் - கோயம்புத்தூர் சாலையில் உள்ள செண்பகபுதூர் என்ற இடத்தில் கர்நாடக பேருந்தை நிறுத்தி சோதனையிட்டபோது, கோயம்புத்தூர் தானிய வியாபாரி தாமோதரன் உரிய ஆவணங்களின்றி கொண்டுவந்த ரூ. 7.18 லட்சத்தைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து அவ்வழியாகச் சென்ற 4 வாகனங்களில் ரூ. 3.80 லட்சம்; ரூ. 1.79 லட்சம்; ரூ. 2.2 லட்சம் என மொத்தம் 16 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பெரும்பாலான வாகனங்களில் உரிய ஆவணங்களின்றி பணம் கொண்டு வருவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் உமா சங்கர் தெரிவித்தார்.

தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் செல்லும் வாகனங்களும் சோதனை நடத்தப்படுகிறது என்றும், இரு மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களும் பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தார். பறிமுதல் செய்யப்படும் பணத்தை உரிய ஆவணங்கள் காட்டி பின்னர் கருவூலத்தில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஈரோட்டில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

ABOUT THE AUTHOR

...view details