கோவை: அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவத் துறையில் பணியாற்றிட தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் குறுகிய கால இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “கரோனா வைரஸ் தொற்று பேரிடர் காலத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றிட குறுகிய கால இலவச பயிற்சி தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் பாரத பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டம் 3.0 (PMKVY 3.0) care sector skill council கீழ் சுகாதாரத் துறையில் கரோனா தொடர்பாக வேலைவாய்ப்புடன் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.
இது, கல்வீரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஆறுதல் பவுண்டேஷன் வளாகத்தில் வழங்கப்படுகிறது. இந்த வகுப்பானது 21 நாள்கள் வகுப்பறையிலும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயிற்சி வழங்கப்படும்.