தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

YOGADHARSHINI SPECIAL STORY: வீரத்தமிழச்சி யோகதர்ஷினி குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு

YOGADHARSHINI SPECIAL STORY: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஆறுதல் பரிசு பெற மறுத்த பள்ளி மாணவி யோகதர்சினியின் காளை கோவை ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்று தங்க காசை பரிசாக தட்டிச்சென்றது.

சிறப்பு செய்தி தொகுப்பு
சிறப்பு செய்தி தொகுப்பு

By

Published : Jan 21, 2022, 7:59 PM IST

YOGADHARSHINI SPECIAL STORY: மதுரை மாவட்டம், ஐராவதநல்லூரை சேர்ந்த விவசாயி முத்து என்பவரின் மகள் யோகதர்ஷினி பள்ளிப்படிப்பை படித்துக் கொண்டிருக்கிறார். இந்த இளம் பெண்ணின் தந்தை பாரம்பரியமாக விவசாயம் செய்து வரும் நிலையில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

சிறுவயது முதலே தந்தையுடன் சேர்ந்து காளைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட யோகதர்ஷினிக்கு ஜல்லிக்கட்டில் ஆர்வம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தான் வளர்த்த காளையை களமிறக்கினார் யோகதர்ஷினி.

அப்போது அவரது காளை பிடிமாடாக போனது. அப்போது அவரது ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக விழாக் குழுவினர் சிறப்பு பரிசு வழங்க அழைத்தனர். ஆனால், அதனை வாங்க மறுத்து யோகயோகதர்ஷினி அங்கிருந்து வெளியேறினார்.

இதனையடுத்து அவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அவரை பரிசு வாங்கிச் செல்லும்படி மைக்கில் கூறினார். ஆனாலும், பரிசினை வாங்காமல் யோகதர்ஷினி சென்று விட்டார்.

இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. கடந்த ஆண்டும் இதே போல அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் யோகதர்ஷினி தனது காளையை களமிறங்கிய போது விழாக்குழுவினர் பரிசு வழங்க அழைத்த போது அதனைப் பெற மறுத்து காளையோடு வெளியேறினார்.

அமைச்சர் அழைத்தும் திரும்பி பார்க்காமல் சென்ற மாணவி

அப்போது வருவாய் துறை அமைச்சராக இருந்த ஆர்.பி. உதயகுமார் மைக்கில் யோகதர்ஷினியை பரிசு வாங்குவதற்காக அழைத்த போதும் அதனை ஏற்காமல் சென்றார். இந்த நிலையில் முதன்முறையாக தனது காளை முத்து கருப்பை கோவை ஜல்லிக்கட்டில் பங்கேற்க அழைத்து வந்தார் யோகதர்ஷினி.

529ஆவது மாடாக யோகதர்ஷினியின் காளை முத்து கருப்பு களம் இறங்கியது. அப்போது யார் கைகளிலும் சிக்காமல் துள்ளி குதித்து ஓடியது. இதனால் மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு யோகதர்ஷினிக்கு அண்டா மற்றும் ஹாட் பாக்ஸ் பரிசாக அளிக்கப்பட்டது.

தொடர்ந்து யோக தர்ஷினியின் காளை நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடவில்லை என்றாலும், அவரை ஊக்குவிக்கும் வகையில் தங்க காசு பரிசளிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து யோகதர்ஷினி அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தங்கக் காசு பரிசாக பெற்று சென்றார்.

இதுகுறித்து யோகதர்ஷினி கூறும்போது, ”கடந்த 6 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டில் தங்களது காளைகளை பங்கேற்ற செய்து வருவதாகவும், அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் தனது காளை பங்கேற்று உள்ளதாகவும் கூறினார்.

முதல் முறையாக கோவை ஜல்லிக்கட்டில் தனது காளை பங்கேற்று பரிசுகளை வென்றதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் வீர பெண் யோக தர்ஷினி.

இதையும் படிங்க:முலாயம் சிங்கிடம் ஆசி பெற்ற அபர்ணா யாதவ்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details