தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கடவுச்சீட்டு சேவை மையத்தில் இன்று 'அது' நடந்தது! மகளிர் மட்டும்! - Coimbatore Passport service office

கோவை: கோவை சித்ரா பகுதியில் உள்ள பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) சேவை மையத்தில் பெண் பணியாளர்கள் மட்டுமே இன்று (மார்ச் 8) பணியாற்றினர்.

கோவை பாஸ்போர்ட் சேவை மையம்
கோவை பாஸ்போர்ட் சேவை மையம்

By

Published : Mar 8, 2021, 7:27 PM IST

பெண்களுக்கான நாள் இன்று. தன்னம்பிக்கை, ஊக்கம், விவேகம் ஆகிய பண்புகளைக் கொண்டு தாமும் அனைத்துத் துறைகளிலும் சாதிக்க முடியும் எனப் பெண்கள் தங்களின் திறமையை முடிந்தவரை செவ்வனே செய்துவருகின்றனர்.

கோவை கடவுச்சீட்டு சேவை மையம்

இன்று உலகம் முழுவதும் மகளிர் நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக கோவை, அவிநாசி சாலை, சித்ரா பகுதியிலுள்ள கடவுச்சீட்டு சேவை மையத்தில் மகளிர் நாள் கொண்டாடப்பட்டது.

மகளிர் மட்டும்!

அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்ற முடியும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அம்மையத்தில் பெண்கள் மட்டுமே இன்று ஒருநாள் பணியாற்றினர். மையத்தில் உள்ள அனைத்துப் பிரிவுகளிலும் பெண் பணியாளர்கள் மட்டுமே பணியாற்றினர்.

இதில், 20-க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் ஆவணங்களைச் சரிபார்த்தல், கடவுச்சீட்டுக்குப் புகைப்படங்கள் எடுத்தல், சோதனைகள் உள்ளிட்ட பணிகளைச் செய்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details