கோயம்புத்தூர்:ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்குள்பட்ட பகுதியில் நேற்றிரவு (பிப்ரவரி 4) காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. அதில் ஐந்து வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று, அப்பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையை உடைத்து ரேசன் அரிசியைத் தின்றதால் செரிமானம் இன்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையறிந்த பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் துணை கள இயக்குநர் கணேசன், மானாம்பள்ளி வனச்சரக மணிகண்டன் கால்நடை மருத்துவர் சுகுமாரன் உள்ளிட்டோர் தலைமையில் மூன்று மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு உடல் பரிசோதனை ஆய்வுமேற்கொள்ளப்பட்டது.
அப்பகுதியில் முகாமிட்டிருந்த யானை வேட்டைத் தடுப்பு காவலர்கள், இறந்த யானையின் பக்கம் வரவிடாமல் அங்கும் இங்கும் ஓடியதால் பெரும் பரபரப்பு நிலவியது.