கடந்த சில நாள்களிலிருந்து காட்டு விலங்குகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
சந்தேகத்திற்கிடமான முறையில் காட்டு யானை உயிரிழப்பு! - ஆனைமலை புலிகள் காப்பகம்
வால்பாறை தனியார் எஸ்டேட்டில் காட்டு யானை அழுகிய நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளது. இது குறித்து வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
காட்டு யானை இறப்பு
இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறையில் வனத் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்ட பொழுது, வால்பாறை வனசரகத்திற்குள்பட்ட டாடா காபி நிறுவனத்திற்குச் சொந்தமான வரட்டுப்பாரை காபி எஸ்டேட்டில் பெண் காட்டு யானை இறந்துள்ளது.
யானையின் மரணம் குறித்து வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.