கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோபால்சாமி பீட்டில் வனக்காவலராகப் பணிபுரிந்து வருபவர் தங்கராஜ். இந்நிலையில், நேற்று இரவு பணியில் இருந்த அவர், காட்டு யானை நடமாட்டத்தைக் கண்காணித்து வந்துள்ளார்.
காட்டு யானை துரத்தியதில் வனக்காவலர் காயம் - காட்டு யானை
கோவை: கோபால்சாமி பீட்டில் காட்டு யானை ஒன்று வனக்காவலரை துரத்தியபோது நிலைதடுமாறி கீழே விழுந்த அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

pollachi
அப்போது, வனப்பகுதியில் மறைந்திருந்த காட்டு யானை, வனக்காவலரைத் துரத்தியது. அதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவருக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கடந்த வாரம் பருத்தியூர் பீட்டில் வனக்காவலர் சபரிநாதனை காட்டு யானை தாக்கியது குறிப்பிடத்தக்கது.