தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

wife killed her husband: கொலையை தற்கொலையாக மாற்றிய மனைவி - நடந்தது என்ன? - கொலையை தற்கொலையாக மாற்றிய மனைவி

wife killed her husband:கணவனை கொலை செய்துவிட்டு, அவரே தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவி மற்றும் கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.

http://10.10.50.85//tamil-nadu/26-December-2021/tn-cbe-01-husband-suicide-photo-script-tn10027_26122021111137_2612f_1640497297_593.jpg
http://10.10.50.85//tamil-nadu/26-December-2021/tn-cbe-01-husband-suicide-photo-script-tn10027_26122021111137_2612f_1640497297_593.jpg

By

Published : Dec 27, 2021, 7:05 AM IST

wife killed her husband: கோயம்புத்தூர் மாவட்டம் கவுண்டம்பாளையம் அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் ராஜா (36). அவரது மனைவி ரீனா (36). திருமணமாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி ரீனா தனது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக துடியலூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதன் அடிப்படையில் காவல்துறையினரும், தற்கொலை என வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து ராஜாவின் சகோதரியான மாலா என்பவர் ராஜாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் ராஜாவின் உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்களும், ராஜா தற்கொலை செய்து கொண்டதாக தெரியவில்லை என கூறியுள்ளனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் ராஜாவின் மனைவியிடம் நடத்திய தீவிர விசாரணையில், ராஜாவின் மனைவியான ரீனாவும், அவருடன் தகாத உறவிலிருந்த ஆண்நண்பரும் சேர்ந்து ராஜாவை கொலை செய்து, தூக்கிலிட்டது தெரியவந்தது.

இதனையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த காவல்துறையினர், ராஜாவின் மனைவி மற்றும் காதலன் சதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:Omicron Spreads: பள்ளி,கல்லூரிகளை மூட வேண்டும் - தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம்

ABOUT THE AUTHOR

...view details