கோயம்புத்தூர்:கோவையில் பெய்து வரும் மழையின் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்தது.
கோவையில் கடந்த நான்கு நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நேற்று முன்தினம்(நவம்பர் 7) மாலை முதல் இரவு முழுவதும் கோவையில் பல இடங்களில் மழைப் பொழிந்தது.
நீரில் மூழ்கிய அவினாசி மேம்பாலம்
இதனால் கோவையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. கோவையில் முக்கிய மேம்பாலமான அவினாசி மேம்பாலத்திற்கு அடியில் நீர் தேங்கியதால் வாகனங்கள் முழுவதும் மேல்பாத்திற்கு மேலே அனுமதிக்கப்பட்டன. இதனால் மேல்பாலத்திற்கு மேல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது.
இந்நிலையில் அவினாசி சாலை உப்பிலிப்பாளையம் பகுதியில் உள்ள காவலர் சமுதாயக்கூட வளாகத்தில் இருந்த பூவன் மரம் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
உப்பிலிப்பாளையம் பகுதியில் வேரோடு சாய்ந்த மரம் கோவை குற்றாலத்தில் நீர் வரத்து அதிகரிப்பு
சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மீட்புப் பணியாளர்கள் மரத்தை அப்புறப்படுத்தினர். கோவையில் பெய்து வரும் மழையின் காரணமாக கோவை குற்றாலத்தில் நீர் வரத்து அதிகமாகி உள்ளது. நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகமானதால் புட்டுவிக்கி பாலத்தில் நீர் ஆர்ப்பரித்து ஓடியது.
அதே தருணம் கோவை புறநகர்ப் பகுதிகளான அன்னூர், மேட்டுப்பாளையம், தடாகம், ஆலாந்துரைப் பகுதியிலும் மழையின் காரணமாக சாலைகள் சேதமடைந்தன. மரக்கடைப்பகுதியில் பழமையான வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதையும் படிங்க: கனமழை: பள்ளி, கல்லூரிக்கு இரண்டு நாள் விடுமுறை