FMCG (Fast Moving Consumer Goods) எனப்படும் விரைவில் விற்பனையாகக் கூடிய நுகர்பொருள்களை விற்கும் நிறுவனங்கள், சில்லரை, மொத்த விற்பனை செய்யும் விநியோகஸ்தர்களுக்கு எவ்வித சலுகையும் வழங்காமல், ஆன்லைன் நிறுவனங்களுக்கு மட்டும் சலுகை வழங்குவதாகக் கூறி, தமிழ்நாடு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட இவர்கள், இந்திய அளவில் FMCG தயாரிப்பு நிறுவனங்களின் பொருள்கள் 90 விழுக்காடு சில்லரை, மொத்தம் விற்பனைகளில் நடைபெறுவதாகவும், 10 விழுக்காடு மட்டுமே ஆன்லைன், ரிலையன்ஸ், ஜியோ மார்ட், பிக் பேஸ்கட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.