தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாளை திமுகவினர் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
கருணாநிதி பிறந்தநாள்: கோவையில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் - Pollachi news
கோவை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாநில நெசவாளர் அணி சார்பில் 150க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, மளிகை சாமான்கள், காய்கறிகள் வழங்கப்பட்டன.
கோவையில் திமுக சார்பில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள்
அதனடிப்படையில் இன்று (ஜூன் 7) கோவை தெற்கு மாவட்டம் குள்ளக்காபாளையம் ஊராட்சியில் மாநில நெசவாளர் அணி சார்பில் அதன் மாநில செயலாளர் கே.எம். நாகராஜன் ஏற்பாட்டில் அப்பகுதியில் குடும்ப அட்டை இல்லாத ஏழை எளியோர் 150க்கும் மேற்பட்டவர்களுக்கு கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் அரிசி, மளிகை சாமான்கள் காய்கறிகள், முகக்கவசம், கிருமிநாசினி அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.