OLX மூலம் பொருள்கள் வாங்குபவர்களை நூதன முறையில் மோசடி கும்பல் ஏமாற்றி வருவதால் அதன் மூலம் பொருள்களை வாங்குவோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சைபர் கிரைம்

இது குறித்து சைபர் கிரைம் காவல் துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சமீபகாலமாக OLX மூலம் பொருள்கள் வாங்குபவர்களை நூதன முறையில் ஒரு கும்பல் ஏமாற்றி வருகிறது. அந்தக் கும்பல் அவர்களை ராணுவ வீரர்கள் போல் அடையாளப்படுத்திக் கொண்டு அவர்களது பொருள்களை குறைந்த விலைக்கு விற்பதாகப் பதிவிட்டு மக்களை நம்பவைத்து பணத்தை வங்கிக் கணக்குகள் மூலம் பெற்றுக்கொண்டு, கைப்பேசி எண்களை switch off செய்து விட்டு, OLXஇல் பதிவிட்ட விளம்பரத்தையும் அழித்து விடுகின்றனர்.
எனவே, OLX மூலம் பொருள்களை வாங்கும்போது மக்கள் இதுபோன்ற நபர்களிடம் ஏமாந்து விடாமலும், முடிந்தவரை தாங்களாகவே நேரடியாகவோ அல்லது உறவினர்கள், நண்பர்கள் மூலமாகவோ பொருள்களை நேரடியாகப் பார்த்து விற்பனை செய்யும் நபரிடம் விசாரித்தும் வாங்கிக் கொள்ளவேண்டும். இதுபோன்ற ஆன்லைன்களில் பார்த்து வாங்குவதை தவிர்க்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.