கோயம்புத்தூர்: கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த நாள் இன்று பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை கொண்டாடும் விதமாக பலரும் பல இடங்களில் அவரது புகைப்படத்திற்கும், திரு உருவ சிலைக்கும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிதம்பரனார் இழுத்த செக்கிற்கும், அவரது திருவுருவ படத்திற்கும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வ.உ.சிதம்பரனாரின் புகைப்பட கண்காட்சி பேருந்தை கொடியசைத்து அமைச்சர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த நாள் வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று முதலமைச்சர் கூறியதன் அடிப்படையில் வ.உ.சிதம்பரனாரின் அருமைகளை போற்றுகின்ற வகையில் ஒரு வருடத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது என்று கூறினார்.