கோயம்புத்தூர்:சாய்பாபா காலனிப் பகுதியைச் சேர்ந்தவர், காசி. இவரது குடும்பத்தில் வீரா என்ற பொமரேனியன் நாயும் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. பின்னங்கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் நடக்க முடியாமல் இருந்த இந்த நாயினை, ஆதரவற்ற நாய்களைப் பராமரிக்கும் தொண்டு நிறுவனத்திலிருந்து தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர், காசி குடும்பத்தினர்.
வீரா, நடக்க முடியாமல் மன வருத்தத்தில் இருப்பதை அறிந்து, அதனைப்போக்கும் வகையில் பிரத்யேகமான நடை வண்டி ஒன்றை காசி உருவாக்கினார். அந்த நடை வண்டி மூலம் வீராவிற்கு நடைப்பயிற்சி அளித்து, நடக்கவும் செய்துள்ளார்.
இதற்காக பிரதமர் மோடி உள்ளிட்டோர் காசிக்குப் பாராட்டுத் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு, நாய்க்குட்டி வீராவிடம், வெளியில் கடைக்குச் செல்லலாம் என காசியின் மகள் கூறியுள்ளார். அதற்கு நாய்க்குட்டி வீரா தயாரான நிலையில், சற்று நேரம் தாமதம் ஏற்பட்டது.