கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மார்க்கெட் சாலையில் அரசு மதுபானக்கடை ஒன்று உள்ளது. அங்குள்ள அரசு மதுபானக்கடை முன்பு, ஆட்டோவை நிறுத்தி முன் சீட்டில் ஒரு ஆணும், பின் சீட்டில் ஒரு பெண்ணும் உட்கார்ந்து, பட்டப்பகலில் பீர் குடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
சமூகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் பொதுமக்களின் பாதுகாவலன் என்ற எண்ணம் மாறி, இன்று ஆட்டோ மினி பாராக மாறி இருப்பது மிகவும் வேதனையாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.