கோயம்புத்தூர்:கோவையில் நூல் ஆலை மேலாளர் ஒருவர், அங்கு பணி புரியும் வெளிமாநிலத்தைச் பெண் ஒருவரை தாக்கியதில், அந்தப் பெண் கூக்குரலிடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது குறித்து சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன.
இது குறித்து மாநகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், சரவணம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நூல் ஆலையில் இந்தச் சம்பவம் அரங்கேறியது தெரியவந்தது.
மேலாளர் ஒருவர் பணிபுரியும் பெண்ணைத் தாக்கும் வைரல் வீடியோ அங்கு பணிபுரிந்து வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் பணிக்கு வர மறுத்ததாகத் தெரிகிறது.
இதனால் விடுதிக் காப்பாளர் அந்த இளம்பெண்ணைத் தாக்கி உள்ளதாகவும், வலி தாங்க முடியாமல் அந்தப் பெண் அலறியதும் தெரியவந்தது.
இதுகுறித்து சரவணம்பட்டி காவல் துறையினர் அந்த நூல் ஆலை விடுதிக் காப்பாளர் லதா மற்றும் மேலாளர் முத்தையா இருவரையும் கைது செய்துள்ளனர்.
இருவரும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 4 பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அவர்கள் அங்கு பணிபுரியும் 4 பெண்களைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:இந்தியாவில் ஒமைக்ரான்: தொற்று எண்ணிக்கை 5 ஆக உயர்வு