தமிழ்நாடு

tamil nadu

சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மலையாண்டிபட்டினம் கிராம மக்கள்!

By

Published : Dec 1, 2020, 10:00 PM IST

கோவை : சி.மலையாண்டிபட்டினம் ஊராட்சி மன்றத் திட்ட பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத பாஜக பிரமுகர் உள்ளிட்ட மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சார் ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Villagers of Malayandipattinam besieged  pollachi sub Collector's Office
சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மலையாண்டிபட்டினம் கிராம மக்கள்!

கோவையை அடுத்த பொள்ளாச்சி சி.மலையாண்டிபட்டினம் ஊராட்சி மன்றத் தலைவராக மயில்சாமி (அதிமுக), துணைத் தலைவராக ரவி (பாஜக) ஆகியோர் பதவிவகித்து வருகின்றனர். மேலும், 5 பேர் வார்டு உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்நிலையில் ஊராட்சியில் சாலை வசதி, தெருவிளக்கு, கழிப்பிடம் அமைப்பது, ஆடு வழங்கும் திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ரவி உள்ளிட்ட மூன்று பேர் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என கூறப்படுகிறது.

இது தொடர்பாக சி.மலையாண்டிபட்டினம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரவி, வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட மூன்று பேர் மீது கிராம மக்கள் பல்வேறு புகார்களை அளித்திருந்ததாக அறியமுடிகிறது. அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியில் இருந்த கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் மயில்சாமி தலைமையில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர்.

சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மலையாண்டிபட்டினம் கிராம மக்கள்!

இதனையடுத்து, பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் முற்றுகையிட்ட கிராம மக்களை அழைத்துப் பேசினார். அப்போது, மக்கள் நலத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத துணை தலைவர் ரவி, 2 வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட மூன்று பேர் மீது நடவடிக்கை எடுத்து கிராமத்தில் நலத்திட்ட பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சார் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க :வால்பாறையில் டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுநர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details