தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காத கிராமம் மக்கள் - காரணம் தெரியுமா? - கோவை செய்திகள்

கோவை அருகே வவ்வால்களை காப்பதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் கிராம மக்கள் தீபாவளி கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காத கிராமம் மக்கள்
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காத கிராமம் மக்கள்

By

Published : Nov 4, 2021, 8:27 AM IST

கோயம்புத்தூர்: கருமத்தம்பட்டி அருகே கிட்டாம்பாளையம் கிராமம் தீபாவளி பண்டிகை அன்று எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக காணப்படுகிறது. . இதற்கு காரணம் அந்த கிராமத்திலுள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான வவ்வாள்கள் தங்கி உள்ளது தான். பட்டாசு வெடித்தால் அவை இடம் பெயர்ந்து விடும் என்பதால் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடி வருகின்றனர் கிராம மக்கள்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், “கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கிராமத்திலுள்ள மரங்களில் வவ்வால்கள் இருந்ததால் பட்டாசு வெடித்தால் அவை இடம் பெயர்ந்து விடும் என்ற காரணத்தால் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாட தொடங்கியதாக தெரிவித்தார்.

பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்

அன்று முதல் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகிறோம். வவ்வால்கள் தங்களுடைய கிராமத்தில் இருப்பதால் பல்வேறு வகையான மரங்கள் வளர காரணமாக அமைகிறது.

இங்குள்ள வவ்வால்கள் மாலை நேரத்தில் நீலகிரி, கேரளா வனப் பகுதிகளுக்கு சென்று அங்குள்ள பழங்களை சாப்பிட்டுவிட்டு வரும் வழியிலும் தங்கள் கிராமத்தை சுற்றிலும் எச்சத்தை போடுவதால் அதன்மூலம் மரங்கள் வளர்கின்றது "என தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:கரூர் - வெள்ளியணை அதிரசம் என்றாலே தனிச்சிறப்பு!

ABOUT THE AUTHOR

...view details