கோயம்பத்தூர்: கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில் இருந்து குழந்தையை அழைத்துச் செல்ல, குழந்தையின் பெற்றோர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான சான்றிதழை வழங்க மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோர் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின் படி ரசாயனம் தடவிய நோட்டுகளை புகார்தாரிடம் கொடுத்து அனுப்பினார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வைத்து குழந்தைகள் நல பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் தனலட்சுமியிடம் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரையும் , அவருடன் லஞ்சம் வாங்க உறுதுணையாக இருந்த மற்றொரு ஊழியர் கார்த்திக் என்பவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.