கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு - கேரள எல்லை பகுதியான ஆனைக்கட்டியில் யானைகள் அதிகளவில் வசிக்கின்றன. இந்நிலையில், ஆனைக்கட்டி அருகேவுள்ள அட்டப்பாடி என்ற பகுதியில் சில நாட்களாகவே வாயில் காயங்களுடன் ஐந்து வயது மதிக்கத்தக்க ஆண் யானை உணவு உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டுவந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் உடல்நிலை மிகவும் மோசமடைந்து அந்த யானை உயிரிழந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத் துறையினரும் மருத்துவர்களும் உயிரிழந்த யானையை பரிசோதனை செய்தனர். அதில் யானையின் வாயில் ஏற்பட்ட புண் காரணமாக, அது கடந்த சில வாரங்களகவே உணவு உட்கொள்ளாதது தெரியவந்தது. இதன் காரணமாகவே அது இறந்திருக்கக் கூடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.