தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஸ்டாலினை நிரூபிக்க சொன்ன வானதி சீனிவாசன்! - Raksha Bandhan

கோயம்புத்தூர்: மும்மொழி கல்வியை திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்க்கிறார். அவர் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் மூன்றாம் மொழி இல்லை என்று நிரூபிக்க வேண்டும் என, வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Vanathi Srinivasan questioned Dmk leader Stalin

By

Published : Aug 3, 2020, 6:01 PM IST

இந்தியா இன்று (ஆகஸ்ட் 3) முழுவதும் சகோதரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை டாடாபாத் பகுதியில் பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவையில் வசிக்கும் வட இந்திய குடும்பங்களுடன் சேர்ந்து, சகோதரர்கள் தினத்தை கொண்டாடினார்.

அப்போது அவர் பேசியதாவது; கரோனா தொற்றால் இவ்விழா சிறப்பாக கொண்டாட வாய்ப்பு இல்லாவிடினும், கோவையில் இருக்கும் சகோதரர்கள், வட இந்திய குடும்பங்களுடன் சேர்ந்து எளிமையான முறையில் கொண்டாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசியக் கல்வி கொள்கையானது கல்வியாளர்கள் பொது மக்களிடம் கருத்து கேட்ட பிறகே அமலுக்கு வந்துள்ளது.

இரு மொழி கொள்கையைப் பின்பற்றும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இருப்பினும், கூடுதல் மொழியை கற்பதும் நன்மைதான். சிபிஎஸ்சி பள்ளிகளில் மூன்றாவது மொழியை குழந்தைகளுக்குக் கற்று தருகின்றனர். ஆனால் நமது அரசு பள்ளி மாணவர்களுக்கு அது கிடைப்பது இல்லை.

புதிய கல்வி கொள்கைக்கு எதிராக அறிக்கை விடும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், அவர்களது குடும்ப குழந்தைகள் கல்வி கற்கும் பள்ளிகளில் மூன்றாவது மொழி கற்பிக்கப்படவில்லை என்பது குறித்து நிரூபிக்க வேண்டும். இது குறித்து அறிக்கையை அவர் வெளியிட வேண்டும்.

கோவையில் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் எம்பிகளுக்கு 10 சீட்டுகள் வழங்கப்படுகின்றன. அதனை திருப்பி தர திமுக வினர் தயாராக உள்ளனரா? இந்தக் கல்வி சீட்டை சிலர் விற்பனை செய்து விடலாம் என்று எண்ணுகின்றனர். எனவே, மொழி அரசியல் செய்ய வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details