தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

யானையை கொடூரமாகத் தாக்கும் பாகன் - பணியிடை நீக்கம் செய்த அரசு

யானைகள் புத்துணர்வு முகாமில், யானையைப் பாகன்கள் கடுமையாகத் தாக்கும் காணொலி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதில் தொடர்புடைய பாகன் வினில் குமாரை அரசு அதிரடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளது.

யானையை கொடூரமாகத் தாக்கும் பாகன்கள் - பணியிடை நீக்கம் செய்த அரசு
யானையை கொடூரமாகத் தாக்கும் பாகன்கள் - பணியிடை நீக்கம் செய்த அரசு

By

Published : Feb 21, 2021, 8:53 PM IST

Updated : Feb 21, 2021, 9:13 PM IST

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாம் தேக்கம்பட்டியில் நடைபெற்று வருகிறது.
இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 26 கோயில் யானைகள் பங்கேற்றுள்ள நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் யானை ஜெய்மால்யதாவும் பங்கேற்றுள்ளது.
இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் யானை ஜெய்மால்யதாவை, அதன் பாகனும் உதவி பாகனும் கடுமையாகத் தாக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் யானையைத் தாக்கிய பாகன் வினில் குமாரை பணியிடை நீக்கம் செய்ய இந்துசமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. முதல்கட்டமாக இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் நேற்று மாலை(பிப்.20) கால் சங்கிலியை கழட்டிய யானை, பாகனின் காலை மிதித்ததாகவும், அந்த யானை அங்கிருந்து வெளியேறி இருந்தால் மற்றவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்ற காரணத்தினாலும் யானையை எச்சரிக்கும் வகையில், தாக்கியதாக அவர்கள் இருவரும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்நிலையில் இச்செயலில் ஈடுபட்ட பாகன் வினில் குமாரை இந்து சமய அறநிலையத்துறை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளது.

யானையை கொடூரமாகத் தாக்கும் பாகன்கள் - பணியிடை நீக்கம் செய்த அரசு
அதேசமயம் தனியார் யானைகளை கொடுமைப்படுத்துதல் குற்றம் என்ற பிரிவில் வனத்துறையினர், இதில் தலையிட்டு அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க இருக்கின்றனர். அவர்களைக் கைது செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.இதையும் படிங்க: குப்பையை அள்ளுவதற்கு ரூ.1.5 கோடி செலவு; இதுதான் இவர்கள் திட்டம்: திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி விமர்சனம்
Last Updated : Feb 21, 2021, 9:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details