கோயம்புத்தூர்:தமிழ்நாட்டில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் மழைக்கால நோய்களான டெங்கு, பன்றிக்காய்ச்சல் ஆகியவற்றின் பரவல் கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கோவையில் சளி காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த 63 வயது பெண் ஒருவருக்கும், பீளமேட்டைச் சேர்ந்த 68 வயது பெண் ஒருவருக்கும் மருத்துவ பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்களை தனிமைப்படுத்தியுள்ள மருத்துவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்த 13 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.