கோவை:பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவிலிருந்து கொண்டம்பட்டி செல்லும் வழியில் ஆர்.எஸ்.ரோடு ரயில்வே மேம்பாலத்தின் கீழ், சிலர் போதைப் பொருட்களை விற்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, போதைபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் மப்டி உடையில் இன்று (அக்.17) அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த 2 நபர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவே அவர்களைப் பிடித்து விசாரித்ததில் அவர்களிடமிருந்த போதைப்பொருட்கள், போதை ஸ்டாம்ப்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்யப்பட்டன.
பொள்ளாச்சி அருகே போதைப்பொருட்கள் விற்ற 2 பேர் கைது - பொருட்கள் விற்ற இருவர் கைது
பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து அவ்விருவரையும் கிணத்துக்கடவு காவல்நிலைத்திற்கு கொண்டு சென்ற போலீசார், அங்கு நடத்திய விசாரணையில், அவ்விருவரும் தேனி அருகே நாராயணதேவன் பட்டியைச் சேரந்த ராம்குமார்(32) என்பதும், மற்றொருவர் அதேப் பகுதியில் தியாகி முகமது அலி ஜின்னா தெருவை சேர்ந்த கிஷோர் அகமது (33) என்பதும் தெரியவந்தது. இறுதியாக, அவ்விருவரிடமும் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 100 கிராம் போதை பவுடர், 17 போதை மாத்திரைகள், 19 போதை ஸ்டாம்புகள் ஆகியவற்றின் மதிப்பு ரூ.4.50 லட்சம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வீடியோ: உணவுக்காக ஹோட்டல் முன்பு காத்திருந்த ஒற்றை கடமான்