தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

யானை சேதப்படுத்திய வீடுகளை சீரமைத்து தர பூர்வகுடிகள் கோரிக்கை! - tribes rehabilitation of the wild elephant damaged houses

கோயம்புத்தூர்: நவ மலையில் காட்டு யானை சேதப்படுத்திய வீடுகளை சீரமைத்து தர மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

navamalai tribal  wild elephant damaged houses in Nava Mountain  tribes rehabilitation of the wild elephant damaged houses  யானை சேதப்படுத்திய வீடுகளை சீரமைத்து தர பூர்வகுடிகள் கோரிக்கை
யானை சேதப்படுத்திய வீடுகளை சீரமைத்து தர பூர்வகுடிகள் கோரிக்கை

By

Published : Nov 26, 2019, 12:26 PM IST

பொள்ளாச்சி அருகே உள்ள நவ மலையில் நான்கு மாதங்களுக்கு முன்பு சிறுமி சிவரஞ்சனி, முதியவர் மகாகாளி என இருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தனர். மேலும், காட்டு யானை மலைவாழ் மக்கள் குடியிருப்புகளை இடித்துச் சேதப்படுத்தியது. இதனையடுத்து பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு வனத்துறையினர் காட்டு யானை அரிசி ராஜாவை அர்த்தநாரி பாளையத்தில் மயக்க ஊசி செலுத்திப் பிடித்து டாப்சிலிப்பில் உள்ள வரகளியாறு பகுதியில் விட்டனர்.

ஃபாத்திமாவின் செல்போன் பெற்றோர் கைக்கு சென்றது எப்படி? CBCID விசாரணை

இந்நிலையில், நவ மலைப்பகுதியில் யானை இடித்துச்சென்ற மலைவாழ் மக்கள் வீடுகளைச் சீரமைத்துத் தர வனத்துறையினருக்கு மக்கள் மனு அளித்திருந்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கை இல்லை என மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மலைவாழ் மக்களில் ஒருவரான ஐயப்பன் கூறுகையில், இதுநாள் வரை எவ்வித இழப்பீடு தொகையையும் தராததால் தங்கள் வீடுகளைச் சீரமைக்க முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.

யானை சேதப்படுத்திய வீடுகளை சீரமைத்து தர பூர்வகுடிகள் கோரிக்கை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details