தென்னக ரயில்வே, சிறுதுளி அமைப்பினர் சேர்ந்து சிங்காநல்லூர் ரயில்வே நிலையத்தில் நான்காயிரம் மரக்கன்றுகளை நட்டனர். இந்த நிகழ்ச்சியில் சேலம் மண்டலத்தின் டிவிசனல் ரயில்வே மேலாளர் சுப்பாராவ் தலைமை வகித்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பாராவ், “தமிழ்நாட்டில் அதிக ரயில் நிலையங்களில் இதுபோன்று மரக்கன்றுகளை நட்டு தமிழ்நாட்டை செழிப்பிக்கச் செய்ய வேண்டும். இதை தற்போது கோவையில் செய்துள்ளோம்; இனி திருப்பூர், ஈரோடு மாவட்ட ரயில் நிலையங்களிலும் தொடங்கவுள்ளது” என்றார்.
கோவை சிங்காநல்லூர் ரயில்வே நிலையத்தில் மரக்கன்று நட்ட சேலம் மண்டலத்தின் டிவிசனல் ரயில்வே மேலாளர் சுப்பாராவ் சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறும்போது, “சதர்ன் ரயில்வே உடன் இணைந்து சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் 4000 மரக்கன்றுகளை நட்டுள்ளோம்.
சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா இங்கு நடப்பட்ட மரக்கன்றுகளில் நான்கு மரக்கன்றுகளில் விதை விநாயகர் வைத்துள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசுகள் வழங்கும் விழா: தொடங்கி வைத்த அமைச்சர்!