தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஊடகவியலாளர்களுடன் மாற்றுப் பாலினத்தவர்கள் கலந்துரையாடல்! - ஊடகவியலாளர்களுடன் மாற்றுப் பாலினத்தவர்கள் கலந்துரையாடல்

கோவை: பத்திரிக்கையாளர் மன்றத்தில் மாற்றுபாலினத்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து செய்தியாளர்களிடம் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Transgender interacting session
Transgender interacting session

By

Published : Jan 21, 2020, 11:48 PM IST

Updated : Jan 21, 2020, 11:56 PM IST

இதில் கோவை நிறம் அமைப்பின் நிறுவனர் சிவா, உறுப்பினர்கள் செல்வம் மற்றும் டெல்பினா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கைகளும் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பிகளும் இச்சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் அவர்களின் மன வேதனைகள் குறித்தும் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

செய்தியாளர்களிடம் பேசிய நிறம் அமைப்பின் நிறுவனர் சிவா, "பொதுமக்களுக்கு எங்களை பற்றிய புரிதல் இல்லை. மக்களிடம் கருத்துகளை எடுத்துச் செல்லும் ஊடகங்களுக்கும் புரிதல் இல்லை என்றால் திரும்ப திரும்ப தவறான கருத்துகளே மக்களிடையே செல்லும்.

ஊடகவியலாளர்களுடன் மாற்றுப் பாலினத்தவர்கள் கலந்துரையாடல்

மத்திய மாநில அரசுகளின் நலதிட்டங்கள் திருநங்கைகள் குறித்தே இருக்கிறது. திருநம்பிகள் பற்றிய விழிப்புணர்வு அரசிடம்கூட இல்லை. திருநங்கைகளுக்கு கிடைத்த வாய்ப்புகளும் சலுகைகளும் திருநம்பிகளுக்கும் கிடைக்கவேண்டும்.

ஊடகவியலாளர்களுடன் மாற்றுப் பாலினத்தவர்கள் கலந்துரையாடல்

சமூகத்தில் திருநம்பிகள் தங்களுக்கென்று அடையாளப்படுத்திக் கொள்ள ஒரு அடையாள அட்டையை வழங்க வேண்டும்" என்றார்

இதையும் படிங்க: கோவையில் பெண்கள் உள்ளாடைகளைத் திருடும் சைக்கோ திருடன்!

Last Updated : Jan 21, 2020, 11:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details