கோவை: கேரளாவில் பரவி வரும் தக்காளி காய்ச்சல் எதிரொலியால் தமிழ்நாடு - கேரளா எல்லையான வாளையார் சோதனை சாவடியில் சுகாதார துறை அதிகாரிகள், காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனர்.கேரளாவில் பரவி வரும் தக்காளி காய்ச்சலுக்கு இதுவரை 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தாக்கும் இந்த காய்ச்சல் பாதிப்பு காரணமாக சருமத்தில் சிவப்பு திட்டுக்கள் ஏற்படுவதால் இது தக்காளி காய்ச்சல் என அழைக்கப்படுகிறது. அதிக பாதிப்பு காரணமாக கொல்லம் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு - கேரளா எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.