தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தடுப்பூசி முறைகேடு: ஒலிபெருக்கி மூலம் அறிவித்து டோக்கன் வழங்கல் முறை - Coimbatore Corona Vaccination Centers

தடுப்பூசி டோக்கன் வழங்குவதில் முறைகேடுகளை தடுக்க ஒலிபெருக்கி மூலம் அறிவித்து டோக்கன் வழங்கப்பட்டது.

By

Published : Jul 18, 2021, 12:27 AM IST

கோவை: கரோனா தடுப்பூசி போடுவதற்கு டோக்கன்கள் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெறுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனை தடுக்கும் பொருட்டு கோவை வெள்ளக்கிணறு தடுப்பூசி செலுத்தும் மையத்தில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து டோக்கன் விநியோகம் நடைபெற்றது.

ஒலிபெருக்கி மூலம் அறிவித்து டோக்கன் வழங்கல் முறை நடைமுறை

கோவை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி டோக்கன்களை அரசியல் கட்சியினர் கையாடால் செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுப்பப்பட்டது. இதனால் பல்வேறு மையங்களில் பொதுமக்கள் காவல் துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர். இதன் மூலம் நேற்று 350 டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இனி முறைகேடு நடைபெறுவது தவிர்க்கப்படும் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பொன் வேண்டாம் பொண்ணே போதும் - 'மாஸான' மாப்பிள்ளை

ABOUT THE AUTHOR

...view details