தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

யானைகளுக்கு ஆந்த்ராக்ஸ் பாதிப்பை கண்காணிக்க குழு- கா. ராமச்சந்திரன்

ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி காட்டு யானைகள் உயிரிழந்து வருவதை கண்காணிக்க சிறப்பு ஆய்வுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது என வனத்துறை அமைச்சர் கா. ராமசந்திரன் கூறினார்.

Ka Ramachandran
Ka Ramachandran

By

Published : Aug 21, 2021, 4:51 PM IST

Updated : Aug 21, 2021, 5:21 PM IST

நீலகிரி : தமிழ்நாட்டில் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி காட்டு யானைகள் உயிரிழந்து வருவதை கண்காணிக்க சிறப்பு ஆய்வுக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு முதலமைச்சரின் காடு வளர்ப்பு திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு 5 கோடி மரங்கள் நடவு செய்யப்படும் என்றும் வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற நடமாடும் வாகன நியாய விலை கடை திட்ட தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் கலந்துகொண்டு, திட்டத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

வனப்பகுதியை உயர்த்த நடவடிக்கை

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மலைக் கிராம மக்கள் பயன்பெறும் விதமாக நடமாடும் நியாய விலை கடை திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வாங்கபட்ட அரிசி சிவப்பு நிறத்தில் மோசமாக இருப்பதால், அதனைத் திரும்ப பெற்று மீண்டும் பாலிஸ் செய்து வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வனப்பகுதியை 33 சதவிதமாக உயர்த்த தமிழ்நாடு முதலமைச்சரின் தொலைநோக்கு திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 4 முதல் 5 கோடி மரங்கள் நட திட்டமிடபட்டப்பட்டுள்ளது. இது குறித்து மானிய கோரிக்கையின் போது விரிவாக எடுத்துரைக்கபடும்.

யானைகளுக்கு ஆந்த்ராக்ஸ் பாதிப்பு

கடந்த 10 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தை 2 ஆண்டுகளில் இலாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். வன விலங்கு தாக்கி உயிரிழப்போருக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை உயர்த்தவும், கூடுதல் வேட்டை தடுப்பு காவலர்கள் நியமனமும் செய்யப்படும்” என்றார்.

வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் பேட்டி

தொடர்ந்து, தமிழ்நாடு வனப் பகுதிகளில் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி காட்டு யானைகள் உயிரிழந்து வருவது குறித்து கேட்ட போது, “ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி காட்டு யானைகள் உயிரிழப்பதை கண்காணிக்க சிறப்பு ஆய்வுக் குழு நியமிக்கபட்டுள்ளது. இந்தக் குழுவில் வன கால்நடை மருத்துவர் மற்றும் தனியார் மருத்துவர்கள் இடம்பெற்று உள்ளனர். இது தொடர்பாக அக்குழு ஆய்வு செய்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : உடலினை உறுதி செய் - முதலமைச்சரின் மாஸ் வொர்க்-அவுட் வீடியோ!

Last Updated : Aug 21, 2021, 5:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details