கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த காவல் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு தேர்தல் பிரிவு காவல் துறை தலைமை இயக்குநர் அசுதோஷ் சுக்லா தலைமையில் நடைபெற்றது.
வாக்களர்கள் ஜனநாயக கடமையாற்ற வர வேண்டும் -தேர்தல் டிஜிபி ! - பாதுகாப்பு
கோவை: வாக்கு எண்ணும் மையங்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்பதால் வாக்காளர்கள் அச்சமின்றி ஜனநாயகக் கடைமையை ஆற்ற முன்வர வேண்டும் என தமிழ்நாடு தேர்தல் பிரிவு காவல் துறை தலைமை இயக்குநர் அசுதோஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'மேற்கு மண்டலத்தில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் காவல் துறையினர் தயார் நிலையில் உள்ளது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்பதால் வாக்காளர்கள் அச்சமின்றி ஜனநாயகக் கடைமையை ஆற்ற முன்வர வேண்டும்.
பண விநியோகத்தை தடுக்க பறக்கும் படைகளுடன் உள்ள காவல் துறையினருடன் கூடுதலாக ஒரு காவல் நிலையத்திற்கு மூன்று முதல் நான்கு தனிப்படைகள் வரை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு காவல் பாதுகாப்பு, சிசிடிவி கண்காணிப்பு ஆகியவற்றுடன் ஒரு காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் தொடர் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படும்' என தெரிவித்தார்.