பொள்ளாச்சி நகர, கிழக்கு ஒன்றிய பகுதிகளில் உள்ள சேரிபாளையம், வட சித்தூர், நெகமம், காளியப்பன்கவுண்டன் புதுார், நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்குத் தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச மிதிவண்டிகளை பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் வழங்கினார்.
பின்பு செய்தியாளர்களிடம் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மக்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றினார். இனியும் மக்கள் திமுகவை வெற்றிபெறச் செய்யமாட்டார்கள். பொய்யான வாக்குறுதிகளை அள்ளிவிடுவது திமுகதான்.