தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'நாங்குநேரி, விக்கிரவாண்டி சரித்திர சிறப்பு வாய்ந்த வெற்றி!' - எடப்பாடி பழனிசாமி - Edapadi Palaniswany

கோயம்புத்தூர்: நாங்குநேரி, விக்கிரவாண்டி என இரு தொகுதிகளிலும் மக்கள் சரித்திர சிறப்பு வாய்ந்த வெற்றியை அதிமுகவுக்கு வழங்கியுள்ளனர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

TN CM Edapadi Palaniswamy

By

Published : Oct 24, 2019, 10:49 PM IST

கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்திவருகின்றோம். தொடர் செயல்பாடுகளால் பல விருதுகளையும் பெற்று இருக்கின்றோம். சட்டம் ஒழுங்கில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருந்துவருகிறது. தொழில் செய்வதற்கும் உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

இவ்வாறான உகந்த சூழல் இருப்பதால் சமீபத்தில் நடந்த தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு மூன்று லட்சத்து 431 கோடி ரூபாய்க்கு தொழில் தொடங்க தொழிலதிபர்கள் முன்வந்துள்ளனர்.

இது தற்போது தொடக்க நிலையில் உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அளித்த பொய்யான வாக்குறுதி மக்களிடம் எடுபடவில்லை. எதிர்க்கட்சியினர் மக்களிடம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை அளித்தார்கள், இதை மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.

இந்தத் தேர்தல் வெற்றி மூலம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மக்கள், பொய் வாக்குறுதி கொடுக்கக் கூடாது என எச்சரிக்கை மணி எழுப்பியிருக்கின்றனர். உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை, முடிவுகளை மாநிலத் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.

கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக வெற்றி தொடரும். விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுகவை வெற்றிபெறச் செய்த மக்களுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதையும் படிங்க: நாங்குநேரியில் நாராயணன் சிறப்பான வெற்றி! - ஒரு பார்வை...

ABOUT THE AUTHOR

...view details