தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவை ஆசிரியர்கள் 14 பேருக்கு நல்லாசிரியர் விருது! - 14 Teacher from Coimbatore

கோவை: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோயம்புத்தூரைச் சேர்ந்த 14 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது இன்று வழங்கப்படுகிறது.

கோவை ஆசிரியர் 14 பேருக்கு நல்லாசிரியர் விருது!

By

Published : Sep 5, 2019, 2:40 PM IST

சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரும், ஆசிரியர் பணியை அர்பணிப்புடன் செய்தவருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் தேதியை இந்தியா ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறது.

அதனையொட்டி தமிழ்நாட்டில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை கவுரவிக்கும் பொருட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் ஆசிரியர் தினவிழா நடத்தப்படுகிறது. இதில், மாணவர் சேர்க்கை, சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல், புதுமையான கற்பித்தல் முறை என பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (நல்லாசிரியர் விருது) வழங்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் 165 பேருக்கும், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 165 பேருக்கும், மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் 32 பேருக்கும், ஆங்கிலோ-இந்தியன் பள்ளி ஆசிரியர்கள் 2 பேருக்கும், மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் 3 பேருக்கும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் 10 பேராசிரியர்களுக்கும் என மொத்தம் 377 ஆசிரியர்களுக்கு இவ்விருது இன்று வழங்கப்படுகிறது.

அந்தவகையில், கோயம்புத்தூரிலிருந்து இவ்விருதுக்காக 14 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  • பன்னிமடை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் குழந்தைவேல்
  • கே.கே.நாயுடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியர் வெங்கடேசன்
  • குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் ராஜ ராஜேஸ்வரி
  • சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் புனித பொற்கொடி
  • வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் சண்முகதேவி
  • ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ்
  • அரசூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் செல்வராஜ்
  • ராக்கிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பத்மினி
  • வேடபட்டி பி.எஸ்.ஜி தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் சீலியாமேரி வில்லியம்
  • வக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ருக்மணி
  • ஸ்டேன்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் சோரன் ரேனோ
  • செஞ்சேரிபுதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் கணேசன்
  • ஆர்.வி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் பாக்கியலட்சுமி
  • இடையபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் முருகேசன் உள்ளிட்ட 14 பேரும் இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடமிருந்து நல்லாசிரியர் விருதை பெறுகின்றனர். இந்த விருதுடன் ரூ.10 ஆயிரம் ரொக்கம், 36.5 கிராம் எடையுள்ள வெள்ளி பதக்கம் வழங்கப்பட உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details