தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

யுபிஎஸ் வெடித்த விபத்து - 3 பேர் உடல் கருகி உயிரிழப்பு! - தடய அறிவியல் துறை விசாரணை

உருமாண்டம்பாளையம் அருகே வீட்டில் இருந்த யுபிஎஸ் கருவி வெடித்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யுபிஎஸ் கருவி வெடித்த
யுபிஎஸ் கருவி வெடித்த

By

Published : Mar 15, 2022, 9:07 PM IST

Updated : Mar 16, 2022, 6:27 AM IST

கோவை:கோவை மாவட்டம்,உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டனைச் சேர்ந்தவர், விஜயலட்சுமி. 2 ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் ஜோதிலிங்கம் உயிரிழந்துவிட்ட நிலையில், அர்ச்சனா மற்றும் அஞ்சலி என்ற இரு மகள்களுடன் வாழ்ந்துவந்தார். ஒரு மகள் ஐடி கம்பெனியிலும்; மற்றொருவர் பைனான்ஸ் நிறுவனத்திலும் வேலை செய்து வருகின்றனர்.

3 பேர் உயிரிழப்பு

இந்நிலையில் நேற்று மார்ச் 14ஆம் தேதி அவர்களது வீட்டில் இருந்து புகை வருவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த கவுண்டம்பாளையம் தீயணைப்புத்துறையினர், வீட்டின் கதவை உடைத்து தீயை அனைத்து உள்ளே சென்று பார்க்கையில், தாய் மற்றும் இரண்டு மகள்களும் இறந்து கிடந்துள்ளனர்.

தீ பற்றிய விபத்தில் உயிரிழந்த சகோதரிகள்

யுபிஎஸ் வெடிப்பு

இதுகுறித்து தீயணைப்புத்துறையினர் கூறும்போது, வீட்டின் ஹாலில் இருந்த யுபிஎஸ்ஸில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக புகை ஏற்பட்டிருக்கலாம் எனவும்; அதை அணைக்க அஞ்சலி மற்றும் அவரது அம்மா ஆகியோர் முயற்சித்திருந்தபோது புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.

காவல் துறை விசாரணை

தகவல் அறிந்து அங்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டியன், துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். பின், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும், தொடர்ந்து தடய அறிவியல் துறையினரை வரவழைத்து ஆய்வு செய்துவருகின்றனர். இவ்விபத்தில் அவர்கள் வீட்டில் வளர்த்து வந்த நாயும் உயிரிழந்துள்ளது.

யுபிஎஸ் கருவி பயன்படுத்துவோர் கவனத்திற்கு

வீடுகளில் யுபிஎஸ் கருவிகளைப் பயன்படுத்துவோர், அதனைக் கவனமாகக் கையாளுவதன் மூலம் இது போன்ற விபத்துகளைத் தவிர்க்கலாம். முடிந்த வரையில் யுபிஎஸ் கருவிகளைப் பயன்படுத்துவோர் வீடுகளை காற்றோட்டமான முறையில் வைத்திருங்கள். ஜன்னல்களைத் திறந்து இருப்பதுபோல பார்த்துக் கொள்வதன் மூலம் விபத்துகளினைத் தவிர்க்கலாம்.

இதையும் படிங்க: காற்றழுத்த கருவி உற்பத்தி ஆலை அமைக்கும் சாம்சங் - முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது!

Last Updated : Mar 16, 2022, 6:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details