கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே உள்ள மதியழகன் நகரைச் சேர்ந்த சிறுவர்கள் அகிலன் (10), சஸ்வந்த் (8), சஞ்சீவ் (7) மூவரும் சூலூர் பெரிய குளம் குளக்கரையில் விளையாடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று (அக் 14) மாலை மூவரும் குளக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது குளத்தில் தவறி விழுந்தனர். இதனை அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுனர் பார்த்து அந்த இடத்திற்கு செல்வதற்குள்ளாகவே மூவரும் குளத்தில் மூழ்கினர்.
குளத்தில் மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு - Coimbatore
கோவையில் குளத்தில் மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குளத்தில் மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு
அதன்பின் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மூவரது உடலையும் மீட்டு சூலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அதன்பின் உடற்கூறாய்வுக்காக சிறுவர்களின் உடல்கள் கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பார்ட்டியில் சக தோழியை கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்த 3 பேர் கைது.