கோவை:பொள்ளாச்சி-கோவை சாலையில் நேற்று (ஆக.13) கேரளாவிற்கு இரண்டு டிப்பர் லாரிகள் கருங்கல் ஏற்றிச் செல்லும்போது பாரதிய ஜனதா கட்சியினர் வழிமறித்து சிறை பிடித்தனர். அதோடு கண்ணாடியை உடைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பொள்ளாச்சி போலீசார் பாஜகவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி டிப்பர் லாரியை மகாலிங்கபுரம் காவல்நிலையம் கொண்டு சென்றனர்.
இதையடுத்து போலீசார் பாஜகவை சேர்ந்த பரமகுரு, சபரி குமார், செந்தில் ஆகிய 3 பேர் மீது ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.