பொள்ளாச்சி : கோவை மாவட்டம் முதலிப்பாளையம் சேர்ந்த நெசிலா. இவரது கணவர் ஷேக் அலாவுதீன். ரியல் எஸ்டேட் மற்றும் லேத் வொர்க் ஷாப் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொலைபேசியில் நெசிலாவை தொடர்பு கொண்டு தான் கூலி மண் அள்ளும் தொழில் செய்து வருவதாகும் மண் அள்ளும் போது தனக்கு தங்கக்கட்டி கிடைத்துள்ளது, இதன் மதிப்பு ரூபாய் ரூ.15 லட்சம் எனவும் தனக்கு பத்து லட்சம் தந்தால் போதும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதை நம்பிய நெசிலா, நடந்த விஷயத்தை கணவர் ஷேக் அலாவுதீனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவரும் ரூ.5 லட்சம் பணத்துடன் அடையாளம் தெரியாத நபர் செல்போனில் கூறிய அந்த இடத்துக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர், ரூ.10 லட்சம் இல்லையென்றாலும் பரவாயில்லை ரூ.5 லட்சம் போதும் எனக் கூறிக்கொண்டு தங்கக் கட்டியை நெசிலா தம்பதியிடம் ஒப்படைத்துள்ளார்.
பொள்ளாச்சி தங்க கட்டி மோசடி; 3 பேர் கைது பின்னர்தான் இந்தத் தங்கக் கட்டி போலி என்பது தெரியவந்தது. இது குறித்து நெசிலா, ஷேக் அலாவுதீன் அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பெயரில் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில், பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த நிஜாம், உசேன் அலி, கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரும் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க : 900 கிராம் நகைகளை உடலில் சுற்றி கொள்ளையடித்த நபர்கள்