தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இந்த உட்கட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறும் - காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் - மூத்த தலைவர் சசிதரூர்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தேர்தலில் ஆதரவு யாருக்கு என்று சோனியா காந்தியின் குடும்பம் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை, இந்த உட்கட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறும் என சசி தரூர் தெரிவித்துள்ளார்.

இந்த உட்கட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறும்- காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர்
இந்த உட்கட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறும்- காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர்

By

Published : Oct 6, 2022, 8:53 PM IST

சென்னை:அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மூத்த தலைவரும் திருவனந்தபுரத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளிடம் ஆதரவு கேட்க தமிழ்நாடு வந்துள்ளார்.

தமிழ்நாடு வந்த சசி தரூர், சைதாப்பேட்டையில் உள்ள ராஜிவ் காந்தி சிலைக்கும், கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் அவரது சிலைக்கும் மரியாதை செலுத்தினார். அதன்பின்

செய்தியாளர்களைச் சந்தித்த சசி தரூர், ”தமிழ்நாட்டிற்கு வருகை தந்து ராஜிவ் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்துவது பெருமையாக உள்ளது. அதே போல, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் காமராஜரின் பங்கு தமிழ்நாட்டிற்கு அதிகமானது. குறிப்பாக, மலைவாழ் மக்கள் வளர்ச்சியில், கல்வி வளர்ச்சி போன்றவைகளில் மிகப்பெரிய அளவில் அவரின் பங்கு உள்ளது. இதனால் ஆதரவு கேட்டு வருகை தந்துள்ளது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் சரிந்துள்ள காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவேன், புத்துயிர் படுத்துவேன். இதுவரை அடிமட்டத்தொண்டர்களின் ஆதரவு எனக்கு அதிகமாக உள்ளது. குறிப்பாக இளைஞர்களின் ஆதரவும் அதிகமாக உள்ளது. இதில் நான் வெற்றிபெற்றால் இளம் இந்தியாவை உருவாக்குவேன்.

எனக்கு பிரசாரம் மேற்கொள்ள, நேரம் குறைவாக உள்ளது. இதனால் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் எனப் பல விதங்களில் ஆதரவு கோரிவருகிறேன். ராகுல் காந்தியின் நடைபயணம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. நடைபயணத்திற்குச்செல்லும் இடங்களில் வெளிமாநிலத்தைச்சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.

சோனியா காந்தியின் குடும்பம் மல்லிகார்ஜூன கார்கேக்கு ஆதரவு அளித்து வருவதாக சமூக வலைதளங்களில் சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால், சோனியா காந்தியின் குடும்பம் இதுவரை அதிகாரப்பூர்வமாக யாருக்கு ஆதரவு என்று தெரிவிக்கவில்லை.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல், ஜனநாயக முறைப்படி நடைபெறும். அதில் யார் வெற்றி பெற்றாலும் காங்கிரஸுக்குத் தான் அது வெற்றி. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிடம் ஆதரவு கோருகிறேன். தமிழில் மொழிபெயர்த்து எனது பிரசாரத்தை முன்வைப்பேன்.

இந்த உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதும், கட்சியின் அடிப்படையில் சில மாற்றங்களைக்கொண்டு வந்து, நிர்வாகிகளை நியமிப்பேன். கட்சியின் அரசியலமைப்பு வலுவாக உள்ளது. இன்று இரவு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோருகிறேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சைவமும் வைணவமும் இந்து மதத்தின் அடையாளம் - தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details