கோயம்புத்தூர்: பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு குழந்தைகள் நல ஆணைய தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி, உறுப்பினர்கள் ராமராஜ், மல்லிகை, சரண்யா உள்ளிட்ட அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், உடன் பயின்ற மாணவர்கள், பள்ளி நிர்வாகிகள், காவல் துறையினர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.