இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தென்னிந்திய வேளாண்மை பல்கலைகழகங்கள் இடையே முதல் இடத்தையும், இந்திய அளவில் உள்ள 63 வேளாண்மை பல்கலைக்கழகங்களில் மூன்றாவது இடத்தையும், இந்திய நாட்டில் உள்ள 150 பல்கலைக்கழகங்களில் 53ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.
72ஆவது இடத்திலிருந்து மூன்றாம் இடம்
கடந்த ஆண்டுகளில் 72ஆவது இடத்தைப் பிடித்த இப்பல்கலைக்கழகமானது, துணைவேந்தரின் அறிவுறுத்தலின்படியும், ஆசிரியர்களின் உழைப்பாலும், மாணவர்களின் சிந்தனை மற்றும் செயல்திறன்களாலும் தேசிய மற்றும் உலக அளவில் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு நிதி பெறுவது, சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை உலகில் சிறந்த ஆராய்ச்சி இதழ்களில் பிரசுரித்தது போன்ற காரணங்களினால் மூன்றாவது இடத்தை அடைந்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் கல்லூரி நிலையங்களில் பணிபுரியும் விஞ்ஞானிகளின் முயற்சியினால் கடந்த ஆண்டை (மதிப்பெண் - 801) விட இந்த ஆண்டில் (மதிப்பெண் - 1009) அதிக மதிப்பெண்களை எட்டியுள்ளோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’நீட் வேண்டாம் என்பதே பெரும்பாலானோர் கருத்து’ - நீதிபதி ஏ.கே.ராஜன் தகவல்