தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கணவரை கத்திரிக்கோலால் குத்திக்கொலை செய்த மனைவி: காரணம்? - பொள்ளாச்சி குற்றச் செய்தி

பொள்ளாச்சியில் தன்னை சந்தேகப்பட்ட கணவரை, கத்திரிக்கோலால் குத்திக் கொலைசெய்த மனைவி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

கணவரை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த மனைவி: காரணம்?
கணவரை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த மனைவி: காரணம்?

By

Published : Apr 6, 2022, 4:45 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சியை அடுத்த வடக்கிபாளையம் தண்ணீர் தொட்டி வீதியைச் சார்ந்தவர், வினோத்குமார்(36). இவர் பாம்பு பிடிப்பது, கால்நடைகளுக்குப் பாரம்பரிய முறையில் வைத்தியம் பார்க்கும் தொழிலை செய்துவருகிறார். இவரின் மனைவி தையல் தொழில் செய்துவருகிறார். இவர்களுக்கு கிஷோர், நட்சத்திரா என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

மதுப்பழக்கத்திற்கு அடிமையான வினோத் குமார், மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி சண்டையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

நேற்றிரவு(ஏப். 05) இவருக்கும், இவரின் மனைவி மகாலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டநிலையில், மனைவி மகாலட்சுமி தையல் தொழிலுக்குப் பயன்படுத்தபடும் கத்திரிக்கோலை எடுத்து வினோத்குமாரை நெஞ்சில் ஆழமாக குத்தியதாகக் கூறப்படுகிறது. வினோத்குமார் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர், அவரை பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே வினோத்குமார் உயிரிழந்தார். கணவர் உயிரிழந்துவிட்டார் என்ற தகவல் கிடைத்ததும் வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் மகாலட்சுமி சரணடைந்தார். இதையடுத்து காவலர்கள் மகாலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 'இரு வேறு இடங்களில் காரை சேதப்படுத்திய மர்ம நபர்கள்!'

ABOUT THE AUTHOR

...view details