தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'சாமி' என்று சொன்னதும் திரும்பிச் செல்லும் காட்டு யானை: வைரலாகும் காணொலி - Covai District News

கோவை: மாங்கரை பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் கோபத்துடன் ஒரு நாயை துரத்திய காட்டு யானையை 'சரி சாமி சரி சாமி' என்று சொன்னதும் யானை திரும்பிச்செல்லும் காணொலி சமூக வலைதளங்கில் வைரலாகிவருகிறது.

elephant
elephant

By

Published : Dec 15, 2020, 10:32 AM IST

Updated : Dec 15, 2020, 1:36 PM IST

கோவை மாவட்டம் மாங்கரை பகுதியில் உள்ள சோதனைச்சாவடி அருகே காலை சுமார் 4 மணி அளவில் பெரிய தந்தங்களுடன் கூடிய காட்டுயானை அவ்வழியே வந்ததுள்ளது. அப்போது அங்கிருந்த நாய் ஒன்று யானையைப் பார்த்து குரைத்தது. இதனால் யானை கோபமடைந்து நாயைத் துரத்தும்போது அங்கிருந்த ஒருவர் யானையைப் பார்த்து 'சரி சாமி சரி சாமி' என்று சொல்லவே யானை யாரையும் ஒன்றும் செய்யாமல் வேறு வழியில் சென்றது. இதனை அங்கிருந்த ஒருவர் அவரது செல்போனில் படம் பிடித்துள்ளார்.

'சாமி' என்று சொன்னதும் திரும்பிச் செல்லும் காட்டு யானை
காட்டு யானை என்றாலே பயத்தில் விரட்டும் மக்கள் பலர் இருக்கையில் சாமி என்று பாசமாய் அழைக்கும் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Last Updated : Dec 15, 2020, 1:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details