தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அறுந்து விழுந்த உயரழுத்த மின்சாரக் கம்பி - 144 உத்தரவால் பெரும் விபத்து தவிர்ப்பு...! - உயரழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்து கிடந்தது தடை உத்தரவ்ால் பொதுமக்கள் யாரும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

கோவை: கணியூர் அருகே உயரழுத்த மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து கிடந்த நிலையில், கரோனா வைரஸ் தடை உத்தரவு காரணமாக இந்த வழியாக பொதுமக்கள் யாரும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

உயரழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்தது - 144 காரணமாக பெரும் விபத்து தவிர்ப்பு
உயரழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்தது - 144 காரணமாக பெரும் விபத்து தவிர்ப்பு

By

Published : Apr 7, 2020, 10:06 PM IST

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள இந்திராநகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 50க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளது. இங்கு சண்முகசுந்தரம் என்பவருக்கு சொந்தமான விசைத்தறி கூடத்திற்கு எதிரே உள்ள சாலையில் இன்று காலை உயரழுத்த மின்சாரம் செல்லும் கம்பி திடீரென அறுந்து விழுந்தது . கரோனா வைரஸ் தடை உத்தரவு காரணமாக வாகன போக்குவரத்து இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள், பொதுமக்கள் அவ்வழியாக நடமாடுவதை தவிர்க்கும் வகையில் தடுப்புகளை ஏற்படுத்தினர். தொடர்ந்து கணியூர் துணை மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்ததன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மின்சார வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து, மின்கம்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அறுந்து விழுந்தஉயரழுத்த மின்சார கம்பி.

இந்த விபத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் அளவீட்டு கருவிகள் எரிந்து சேதமானது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details