தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் நிறைவேற்றப்பட்ட 7 தீர்மானங்கள்

கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

By

Published : Jun 20, 2021, 7:18 PM IST

கோவையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்
கோவையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்

கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கோவை தொண்டாமுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினரும் தமிழ்நாடு சட்டப்பேரவை கழக கொறடாவுமான எஸ்பி வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஏழு தீர்மானங்கள்

1. சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை. எனினும் தொலைபேசியில் சாதிய உணர்வுகளைத் தூண்டும் விதமாக பேசிவருகிறார். இது தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு இக்கூட்டம் கண்டனம் தெரிவிக்கிறது. எனவே கட்சிக்கும், சசிகலாவுக்கும் எந்தவித தொடர்பும், சம்பந்தமும் இல்லை.

2. அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் சசிகலாவுடன் தொலைப்பேசியில் பேசிய கழகத்தை சார்ந்தவர்களை நீக்கியதற்கு கோவை புறநகர் தெற்கு மாவட்ட கட்சியினரை வரவேற்கிறோம்.

3. கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசிகள் அதிக எண்ணிக்கையில் செலுத்துவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவை கொறடாவாக எஸ்.பி. வேலுமணி அவர்களை தேர்வு செய்ததற்கு தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருவருக்கும் இக்கூட்டம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

5. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் அறிவுரையின்படி கரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களில் உண்மையான காரணத்தைக் குறிப்பிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

6. அதிமுகவினர் மீதும், கழகத் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மீதும் காவல் துறை மூலம் பொய் வழக்குகளை திமுகவினர் பதிவு செய்கின்றனர். இதனை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

7. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நூறு விழுக்காடு வெற்றியை அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி உறுப்பினர்களுக்கு பெற்றுத்தந்த பொதுமக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.

உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் கோவை மாவட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், கோவை மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் சாந்தி மதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details