கோயம்புத்தூர்: குன்னூரில் டிசம்பர் 8ஆம் தேதி அன்று நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமைத் தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதில் கேரளாவைச் சேர்ந்த விமான படை வீரர் பிரதீப்பும் ஒருவர்.
இந்நிலையில், அவரது உடல் கோயம்புத்தூர் சூலூர் விமான படைத்தளத்திலிருந்து காலை 11 மணிக்கு சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த பிரதீப்பின் உடல் சூலூர் விமான படைத்தளத்திற்கு காலை 10.30 மணிக்கு கொண்டுவரப்பட்டது.
கேரளாவைச் சேர்ந்த இந்திய விமான படை வீரர் பிரதீப் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களுக்கு நேற்று (டிசம்பர் 10) டெல்லியில் அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் உடல் அவர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பிவைக்கப்படுகிறது. சூலூரிலிருந்து சாலை வழியாக உடலை கேரளாவிற்கு எடுத்துச் செல்ல இருப்பதாக அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: விடைபெற்றார் பிபின் ராவத்: ராணுவ மரியாதையுடன் நடைபெற்ற இறுதிச் சடங்கு