கோவை ராம்நகர் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பேசும்போது, ”ஸ்டாலினுக்கு அதிக கோபம் என் மீதுதான், என்னை எதிரியாக நினைக்கிறார். ஸ்டாலின் நமது ஆட்சியை கலைக்க முயன்றபோது, திமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க தயாராக இருந்தனர். குறுக்கு வழியில் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவதை தடுத்ததால் என் மீது அவருக்கு கோபம்.
எந்த காலத்திலும் ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது. திமுகவின் பூச்சாண்டிக்கு பயப்பட மாட்டோம். சிறுபான்மையினருக்கு திமுக துரோகம் மட்டுமே செய்துள்ளது. சிஏஏவை நிறுத்துமாறு அறிவுறுத்த எங்களால்தான் முடியும். வானதி சீனிவாசனுக்கு கமல் ஹாசன் ஒரு பொருட்டே அல்ல. கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் பாஜக இடையே தான் போட்டி” என்றார்.