தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வெள்ளலூர் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய கூடாது... கோவை அதிமுக ஆர்ப்பாட்டம்... - Coimbatore Corporation

கோவையில் வெள்ளலூர் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய கூடாது என்பதை வலியுறுத்தி அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Etv Bharat

By

Published : Aug 29, 2022, 2:15 PM IST

கோயம்புத்தூர் மாநகராட்சி வளாகத்தில் மேயர் கல்பனா ஆன்ந்த்குமார் தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே வெள்ளலூரில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையப் பணிகளை நிறுத்திவிட்டு வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரம் திமுக - அதிமுக இடையே விவாதப் பொருளாகியுள்ளது. வெள்ளலூர் பேருந்து நிலைய பணிகள் முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கியதால் திமுக முடக்கப் பார்க்கிறது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அப்பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய கூடாது எனவும், அப்பணிகளை கைவிட கூடாது எனவும் வலியுறுத்தி அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் கண்டன பதாகைகளை ஏந்தி விக்டோரியா ஹால் முன்பு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இது குறித்து அவர்கள் தரப்பில், "இந்தப் பணிகள் கைவிடபடுகிறதா இல்லை என்பதை விரைவாக தெரிவிக்க வேண்டும். கைவிடப்பட்டால் மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கேரளாவில் நிலச்சரிவு... ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு... 3 பேர் மாயம்...

ABOUT THE AUTHOR

...view details