தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவையில் பார்முலா 4 கார் பந்தயம் - JK Tire

தேசிய அளவிலான 25ஆவது ஜேகே டயர் சார்பில் கார் சாம்பியன்ஷிப் கோவையில் நடந்துவருகிறது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 19, 2022, 8:15 AM IST

கோயம்புத்தூர்: செட்டிபாளையம் பகுதியில் உள்ள ‘கரி மோட்டார்ஸ் ஸ்பீடு வே டிராக்கில்’ ஜே.கே. டயர் சார்பில், 25ஆவது தேசிய கார் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்று நடந்தது. இதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். எல்.ஜி.பி. பார்முலா 4, நோவிஸ் கப், ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜி.டி. கப், ஜே.கே. டயர் எண்டுரன்ஸ் கப் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

கோவையில் தேசிய கார் பார்முலா

இதில், பார்முலா 4 பிரிவு இரண்டாவது பந்தயத்தில் ஆர்யா சிங் முதலிடத்தையும், விஸ்வாஸ் விஜயராஜ் இரண்டாமிடத்தையும் பிடித்தனர். மூன்றாவது பந்தயத்தில், சந்தீப் குமார் முதலிடத்தையும், அஸ்வின் தட்டா இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.

நோவிஸ் கப் பிரிவில், மூன்றாவது பந்தயத்தில், ஆதித்யா பரசுராம் முதலிடத்தையும், கைல் குமரன் இரண்டாமிடத்தையும் பிடித்தனர். நான்காவது பந்தயத்தில், கைல் குமரன் முதலிடத்தையும், ஆதித்யா பரசுராம் இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.

ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜி.டி., கப் ‘புரோ’ பிரிவில் நவனீத் குமார் முதலிடத்தையும், உல்லாஸ் எஸ் நந்தா இரண்டாமிடத்தையும் பிடித்தனர். ‘அமெச்சூர்’ பிரிவில், சூர்யா மற்றும் ஜே.கே., டயர் எண்டுரன்ஸ் கப் பிரவில், அபிஷேக், அமர்நாத் ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர். தொடர்ந்து, 2ஆவது சுற்றுப்போட்டிகள் கோவையில் நடக்க உள்ளது.

இதையும் படிங்க: லாட்டரியில் ரூ. 25 கோடி... வெளிநாட்டு வேலைக்காக காத்திருந்த ஆட்டோ ஓட்டுநருக்கு அடித்த யோகம்...

ABOUT THE AUTHOR

...view details