தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சனாதன கூடமாக மாறிவரும் ஆளுநர் மாளிகை - கு. ராமகிருஷ்ணன் - சனாதன கூடமாக மாறிவரும் ஆளுநர் மாளிகை

ஆளுநர் மாளிகை சனாதன கூடமாக மாறி வருவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

ஆளுநருக்கு கருப்புக் கொடி போராட்டம் அறிவிப்பு
ஆளுநருக்கு கருப்புக் கொடி போராட்டம் அறிவிப்பு

By

Published : Apr 22, 2022, 7:49 PM IST

Updated : Apr 22, 2022, 9:56 PM IST

கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், "தமிழ்நாடு அரசு அனுப்பும் மசோதாக்களை ஆளுநர் ரவி நிறைவேற்றாமல் இருந்துவருகிறார்.

ஆளுநர் மாளிகை சனாதன கூடமாக மாறி வருகிறது. மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், மாநில சுயாட்சியை அழிக்கும் வகையில் செயல்படும், ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவர் உதகை செல்வதற்காக நாளை கோவை வரும்போது கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற உள்ளது.

மாநில அரசு தமிழ்நாடு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவிடாமல் ஆளுநர் மூலமாக ஒன்றிய அரசு தடுத்து வருகிறது எனக் கூறியவர் ஆளுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி சட்ட மன்றத்தில் அதிமுக வெளிநடப்பு செய்வது வேடிக்கையாக உள்ளது.

சென்னா ரெட்டி மீது கடுமையான தாக்குதல் நடத்திய அதிமுக இப்போது வெளிநடப்பு செய்துள்ளதாக விமர்சித்த அவர் ஆளுநர் மாளிகை மர்ம மாளிகையாக மாறி விட்டது அனுமதி இன்றி கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளது மான்கள் உள்ளிட்ட உயிரினங்கள் இருந்தால் வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலை நிலவுவதாக" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ராமஜெயம் கொலை வழக்கு - புலனாய்வு குழுவுக்கு கிடைத்தது புதிய துப்பு!

Last Updated : Apr 22, 2022, 9:56 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details